இலங்கையை உலுக்கிய துயரம் ; முதியோர் இல்ல தீ விபத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை ; வெளிவந்த முக்கிய தகவல்
களுத்துறை - ஹொரணை, கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து நேர்ந்த போது குறித்த முதியோர் இல்லத்தில் 72 வயோதிபர்கள் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள்
தீப்பரவல் ஏற்பட்ட உடனடியாகவே விரைந்து செயற்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர், அங்கிருந்த 44 முதியவர்களை எவ்வித உயிராபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தீப்பரவலை தொடர்ந்து 11 வயோதிபர்கள் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
தமிழர் பகுதியில் இரண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; 07 சிறுவர்களின் தகாத செயலுக்கு வந்த வினை
தேடுதலின் போது நேற்று சிலரது உடலங்கள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காணாமல் போன 11 பேருமே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.