இலங்கையில் பொலிஸார் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்!
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தை தேடும் நீதி நடவடிக்கையை இலஞ்சம் கொடுத்து தடுத்து நிறுத்துவதற்கு கடத்தல்காரர்கள் முயற்சி மேற்கொள்ளவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லஞ்சத்தின் தாக்கத்திற்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார குறிப்பிடுகின்றார்.
இலங்கையிலிருந்து அனைத்து இலஞ்ச அச்சுறுத்தல்களும் இல்லாதொழிக்கும் வரை நீதி நடவடிக்கை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளினால் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மருந்துப் பொதி ஒன்றின் விலை தற்போது 1000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.