நாடு திரும்பவிருந்த இலங்கை சிப்பாய்க்கு நேர்ந்த துயரம்
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) என்ற லான்ஸ் கோப்ரல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிப்பாய் கடந்த 2022 இல் அமைதிப் பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆகஸ்ட் 2023 இல் நாடு திரும்பவிருந்தார் என்றும் இராணுவம் கூறுகிறது.
கடந்த 11ஆம் திகதி மாலியின் உள்ள பனாகோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த சிப்பாயின் உடல் நாளை (22) இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இலங்கை இராணுவ மரியாதையுடன் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளன.