காதலியை திருமணம் செய்ய மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை; இலங்கையில் சம்பவம்

Colombo Death Penalty Relationship Crime
By Sulokshi Oct 21, 2024 05:12 AM GMT
Report

காதலியை திருமணம் செய்ய, பாடசாலை ஆசிரியையான தனது மனைவி மற்றும் தூங்கிக் கொண்டிருந்த, மூன்று வயதான மகன் மற்றும் ஒரு மாத மகன், ஆகியோரை கொன்ற வழக்கில் தனியார் நிறுவன நிர்வாக அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இரத்மலானை கொலுமடம சந்தி பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனமொன்றின் நிறைவேற்று அதிகாரியான விஜேமுனி மதுர மனுரங்க டி சில்வா (43) என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

காதலியை திருமணம் செய்ய மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை; இலங்கையில் சம்பவம் | Death Penalty Killing Wife Children To Marry Lover

மனைவி பிள்ளைகளை கொன்று எரிப்பு

ரத்மலானையை வசிப்பிடமாகக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை சாட்சியங்கள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தியதன் பின்னரே கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது.

நண்பியுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு ; நடந்தது என்ன?

நண்பியுடன் தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு ; நடந்தது என்ன?

சந்தேக நபர் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளதாக நிருபித்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து  மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து 38 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காதலியை திருமணம் செய்ய மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை; இலங்கையில் சம்பவம் | Death Penalty Killing Wife Children To Marry Lover

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன்ரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

கல்தெமுல்ல, இரத்மலானை, கொலுமடம சந்தியில் வசிக்கும் மனைவியான சச்சேதன சண்டமாலி பெர்னாண்டோ (29), விஜேமுனி இஷான் சானுக டி சில்வா (03), மற்றும் குஷான் சண்டாரு டி சில்வா (01 மாதங்கள்) இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு படுக்கையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

 மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளன்று வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தலைமையில் வழக்கு நெறிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த தீர்ப்பை வழங்கினார்.

காதலியை திருமணம் செய்ய மனைவி பிள்ளைகளை கொன்றவருக்கு மரண தண்டனை; இலங்கையில் சம்பவம் | Death Penalty Killing Wife Children To Marry Lover

சம்பவம் நடந்த போது 31 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், படிக்கும் போது சந்தித்த நீர்கொழும்பில் உள்ள சர்வதேச பள்ளியின் ஆசிரியை ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தெரியவந்ததாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு பாடப்பிரிவில், அவருடன் காதல் உறவு வைத்திருந்த சர்வதேச பாடசாலை ஆசிரியையை திருமணம் செய்யும் நோக்கில், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது மேல் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்ததாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US