13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை ; இரு இலங்கையர்களுக்கு மரண தண்டனை
2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக இரண்டு பிரதிவாதிகளுக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மீட்டியகொட, களுபே பகுதியில் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலங்களில் தனிப்பட்ட தகராறின்போது பொல்லால் தாக்கிக் கொலை செய்தமை தொடர்பாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட ஹிக்கடுவ, களுபே பகுதியைச் சேர்ந்த 51 வயதான அப்புவாஹந்தி அஜித் எனப்படும் 'பொட்ட கிரா' மற்றும் கொரட்டகொட பகுதியைச் சேர்ந்த 41 வயதான லத்து அமித் ஆகியோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை நிறைவுக்குக் கொண்டுவந்த மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.