மனைவி உயிரிழப்பு; கணவன் கைது!
களுத்துறை, கமகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பில் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நேற்று (17) 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, கமகொட பிரதேசத்தைச் சேர்ந்த நீலமுனி ரமணி சில்வா, கடந்த 12ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல் காரணமாக மரணம்
களுத்துறை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட உத்தரவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார்.