கொழும்பை உலுக்கிய மாணவர்கள் மரணம்; பொலிஸார் புதிய தகவல்
கொழும்பு கொம்பனிவீதி அடுக்குமாடி குடியிருப்பில் 67 ஆவது தளத்தில் இருந்து விழுந்து மாணவர்கள் புகைப்படம் எடுக்கும்போது அவர்கள் தவறிவிழுந்து உயிிரழந்திருக்கலாம என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது மாணவிக்கு உயரமான இடங்களில் இருந்து படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பது தெரியவந்துள்ளது. அவரது கையடக்க தொலைபேசியில் அவ்வாறான பல படங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவறிவிழுந்திருக்கலாம்
புகைப்படம் எடுக்க முயன்றவேளை அவர்கள் 67வதுமாடியிலிருந்து தவறிவிழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் , சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
எனினும் மாணவர்களின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        