ராஜகுமாரி உயிரிழப்பு; சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகத்தில் கைதான பெண்
உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் குறித்த் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், அங்கு பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.