20 நாட்களாக உயிருக்கு போராடி வந்த காட்டுயானைக்கு நேர்ந்த சோகம்!
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – கொம்மாதுறை தீவுப் பகுதியில் கடந்த 20 நாட்களாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வீழ்ந்து கிடந்த காட்டுயானை சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த காட்டுயானை இன்றைய தினம் திங்கட்கிழமை (27-02-2023) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதியில் காட்டுயானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட சூட்டு காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து தன்னுடைய உணவுத் தேவைக்காக மீளவும் எழ முடியாமல் தவித்துக்கொண்டு உயிருக்கு போராடி வந்த நிலையில் உயிருக்கு போராடி வந்தது.

மூன்று முறை அம்பாறை மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் குழாமினர் காயப்பட்ட காட்டு யானைக்கு முறையான சிசிச்சை அளித்து வந்துள்ளனர்.
20 நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பராமரித்து உணவளித்து வந்த நிலையில், குறித்த யானையானது இன்று உயிரிழந்துள்ளது.