சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் ; கைதான மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3ஆம் ஆண்டு மாணவர்கள் 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவனின் தற்கொலைக்கு இவர் மீது இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கீழ்த்தரமான பகிடிவதையே காரணம் என இவரது பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களால் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதற்கு இணங்க இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் விசாரணை நடாத்தி வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.