திறைசேரி நிதி மாயம் ; உயிர்மாய்த்த அரச அதிகாரியின் மரண விசாரணை குறித்து வெளியான தகவல்
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம காவல் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை
ரங்க ராஜபக்சவின் சடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் ; மகள் மற்றும் மருமகனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
அவர் பணியில் இருந்தபோது ஒரு முறையும், இடைநிறுத்தப்பட்டிருந்தபோது இரண்டு முறையும் வாக்குமூலங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.