ஆன்லைன் வகுப்பில் இணைந்து பாடம் கற்ற சிறுமி மரணம்...மட்டக்களப்பில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைத்துள்ள வீடொன்றிலிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்று வந்த 13 வயது சிறுமியென பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் பல கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது பொலிஸாருக்கு தெரியவந்த விடயமானது,
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்றபோது அக்கா மற்றும் இறந்த சிறுமி மட்டுமே வீட்டிலிருந்துள்ளனர். அதில் அக்கா குளியலறையிலிருந்ததாகவும் , தங்கை ஆன்லைன் வகுப்பிலிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார். அக்கா குளியலறையிலிருந்து வந்தபோது ஆன்லைன் வகுப்பிலிருந்து சிறுமி உயிரிழந்த நிலையில் இருந்தாகவும் சிறுமியின் அக்கா கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து சிறுமியின் சடலத்தை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.