வாழைப்பழத்தால் பறிபோன உயிர்
வாழைப்பழத்தின் சிறிய துண்டு சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரியான ஹெட்டி கங்கணமாலையின் லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரது மனைவி அவரை கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த (18.10.2023)ஆம் திகதி சாப்பாட்டுக்கு பின் வாழைப்பழம் கொடுத்துள்ளார்.
உண்ணுக் கொண்டிருந்த போது திடீரென வாழைப்பழத்துண்டொன்று தொண்டையில் சிக்கியுள்ளது.
அதனையடுத்து அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளநிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.