குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Sri Lanka Police Puttalam Death School Children
By Shankar Sep 30, 2024 03:58 PM GMT
Report

கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவனின் சடலம் ஹாஜராவத்தை பகுதியிலிருந்து நேற்றையதினம் மாலை மீட்கப்பட்டுள்ளது.

குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Dead Body Of Student Rescued From Pond Kalpitiya

இச்சம்பத்தில் அதே பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய அப்துல் ரஹீம் முஹம்மத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் நுரைச்சோலை - பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதாரன தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிக் மேலும் தெரியவருவதாவது,

குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Dead Body Of Student Rescued From Pond Kalpitiya

சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த மாணவனும், அவரது சகோதரனும் லுஹர் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, குளம் ஒன்றில் குளிப்பதற்காக குறித்த மாணவன் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

எனினும் உயிரிழந்த மாணவனோடு சென்ற சகோதரன், விளையாடுவதற்காக மைதானத்திற்கு சென்றுவிட்டு தனது மூத்த சகோதரனை அழைத்துச் செல்ல மீண்டும் அந்த குளத்திற்கு வந்த போது அவர் அங்கு இருக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பின்னர் வீட்டுக்கு சென்ற சகோதரர், நடந்த சம்பவம் பற்றி வீட்டாருக்கு தெரியப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களின் உதவியோடு குளத்தில் குளிப்பதற்காக சென்று காணாமல் போன மாணவனை தேடியுள்ளனர்.

இதன்போது, சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின், குளத்திலிருந்து காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

மேலும் , பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கியதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸாவை பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US