எம்.பிக்களின் சம்பளம் கட்சி நிதியத்தில் வைப்பு; தயாசிறி எம்.பி எதிர்ப்பு
அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் கட்சி நிதியில் வரவு வைப்பதற்கு தயாசிறி ஜெயசேகர எம்.பி, எதிப்பு வெளியிட்டுள்ளார்.
அதோடு எம்.பிக்களின் சம்பளம் கட்சி நிதியத்தில் வைப்பு செய்வதை தடை செய்யக் கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
இவ்வாறான நடைமுறைகள் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் சுதந்திரத்தை குறைமதிப்புக்குட்படுத்துவ தாகவும் ஜனநாயகத்துக்கு கடுமையான சவாலை ஏற்படுத்துவதாகவும் அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு அரசியல் கட்சியும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்ப னவுகளை வசூலிப்பதையோ அல்லது கட்சிக் கணக்குகளுக்கு திருப்பி விடுவதையோ தடை செய்ய பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் எனவும் தயாசிறி ஜெயசேகர எம்பி சுட்டிக்காட்டியுள்ளார்.