நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது .
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.