இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி
அதேவேளை இந்தியாவுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அத்துடன் வரும் உலகக்கோப்பை தொடரில் தசுன் ஷனகாவுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இவ்வாறான நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக செயற்படுவார் என தெரிவுக்குழு கூறியுள்ளது.