ஆவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்க செய்த லீலைகள்! அம்பலமான உண்மைகள்
ஆவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, (Danushka Gunathilaka) பிணை வழங்க ஆவுஸ்ரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, ஆவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று (07-11-2022) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், பெண் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, கடந்த வருடம் ஜூன் மாதம் இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் ,31 வயதாகும் தனுஷ்க குணதிலக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் பெற்றுள்ளார். மொத்தமாக 55 ஓட்டங்களை அணியாக பெற்றுக்கொடுத்தார்.
கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் சேட், ஜீன்ஸ், பெல்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான விளம்பரத்திலும் தனுஷ்க குணதிலக்க நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.