யாழ்.மாவட்டத்தில் ஆபத்தான வைரஸ்; கந்தரோடையில் உயிரிழந்தவருக்கு டெல்டா
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டரியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபர் கடந்த செவ்வாய் கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கந்தேரோடையை சேர்ந்த குறித்த நபருக்கு ஆபத்தான டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கும் டெல்டா வகை திரிவு வைரஸ் தொற்று காணப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.