கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோடி ரூபா ஆபத்தான பொருள்!
கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26) 21 கோடி ரூபா பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் மூவரை சந்தேகத்தில் கைது செய்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துபாய் வழியாக வந்த விமானம்
ஹொங்கொங்கிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் மூலம் இவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவற்றை எடுத்துச் செல்வதற்காக மூவர் வந்தபோது, குறித்த பொதிகள் அவர்களுக்கு முன்னால் திறக்கப்பட்டது. இதன்போதே செயற்கை கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


