இந்தப் பெண்ணால் இலங்கையில் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்
இலங்கை சுற்றுலா துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான நிறுவனங்களில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தற்போது இலங்கையில் ரஷ்ய கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து உதயங்க வீரதுங்க அரங்கேற்றிய நாடகத்தை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் நாடகமாக கிமர்லி பெர்னாண்டோ செயல் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பின்வரும் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு கிமர்லி பெர்னாண்டோ கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி,
1. பூரண கொரோனா தடுப்பூசி ஏற்றுக்கொண்ட விமான சேவை ஊழியர்களின் கொரோனா பாதுகாப்பு ஆடையை அகற்றுதல்.
2. விமானத்தில் செல்ல உள்ள பயணிகளுக்கு எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசிஆர் செய்ய வேண்டியதன் அவசியத்தை இல்லாது செய்தல்.
3. ஐரோப்பிய சங்கத்தின் நடைமுறைகளுக்கு அமைய 12 வயதிற்கு கீழ்ப்பட்ட நபர்களுக்கு பிசிஆர் செய்வதை தடை செய்தல்.
4. தடுப்பூசி செலுத்திக்கொட சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலும் சுற்றுலா செல்லும் தளங்களிலும் ரபிட் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்துதல்.
'உடனடி பதில் தேவை' என்று கூறப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் நகல் சுகாதார அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுற்றுலா துறை அமைச்சின் செயலாளர் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் கிமர்லி பெர்னாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மற்றும் ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோருடன் ரஷ்யாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்புகளில் அவர் பலதரப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் நாட்டை திறப்பதற்கு முன்னர் ரஷ்ய பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரவும் கிமாலி பெனாண்டோ தீர்மானித்துள்ளார்.
ரஷ்ய சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தடுப்பூசி பெற்றுள்ளனர். அதனால் அவர்கள் மத்தியில் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாது நாட்டிற்குள் இவர்களை அனுமதிப்பதன் மூலம் கொரோனா அதிகளவில் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. பூரண தடுப்பூசி பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் திட்டத்திற்கு கீமாலி அரசு நிதியிலிருந்து ஒரு பில்லியன் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில், கிமாலி சொல்லும் வழியில் சென்றால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விரைவில் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.