கௌரவத்திற்கு பங்கம் ; ஐந்து கோடி நஷ்ட ஈடு கோரும் அடைக்கலநாதன் எம்.பி
தமது பெயருக்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கச் செய்யும் நோக்கத்திலும் இணைய ஊடகங்கள் வழியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,

எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன
தனது சட்டத்தரணியின் மூலம் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அவரிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனது அரசியல் நடவடிக்கையை பாதிக்கக்கூடிய வகையில் அவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவை உண்மைக்கு புறம்பானவை. அந்த கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்,” என்றார்.
மேலும், இதுவரை இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் அல்லது பொலிஸ் நிலையங்களிலும் தமக்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளோ அல்லது விசாரணைகளோ இல்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தினார்.
நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால், எனது கௌரவத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மன உளைச்சலுக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும்,” எனவும் தெரிவித்தார்.