தினம் இரவில் கிராம்பு சேர்த்த பால் அருந்துவதால் இத்தனை நன்மைகளா?
தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மன அழுத்தம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், டென்ஷனுக்கும் மன அழுத்தத்திற்கும் குறைவில்லை. இந்நிலையில் மன அழுத்தத்தை போக்க, தினமும் இரவில் கிராம்பு பால் அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும். கிராம்பு பாலில் உள்ள துத்தநாகம், தாமிரச்சத்து, மெக்னீசியம் ஆகியவை மனதை அமைதிப்படுத்த உதவும்.
தூக்கமின்மை
நல்ல ஆரோக்கியமான உடலுக்கு நல்ல தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மை பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மறுக்க இயலாது. இந்த பிரச்சனையை தீர்க்க, இரவு தூங்கும் முன் கிராம்பு பாலை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
செரிமான ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியமாக இருக்க செரிமான சக்தி சிறப்பாக இருக்க வேண்டும். உணவை ஆற்றல் ஆக மாற்றவும், ஊட்டச்சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்படுவதற்கும் சிறந்த செரிமான அமைப்பு தேவை. இதற்கு கிராம்பு பால் உதவும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரப்பை தூண்டுவதால், ஜீரணம் சிறப்பாக இருக்கும்.
நோய்களிலிருந்து பாதுகாப்பு
கிராம்பில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால், உடலின் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்து, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை பெறுவது குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்
கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் கிராம்பு சேர்த்த பால் உதவும்.