டிட்வா சூறாவளியால் பேரிழப்பு ; நாட்டின் தற்போதைய நிலவரம்
'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலையைத் தொடர்ந்து 85 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் 61,175 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 219,282 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 266 பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் தங்கியுள்ளனர்.
களனி, களு ஆறு, யான் ஓயா, மகாவலி , தெதுரு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, அத்தங்கலு ஓயா, மாணிக்க கங்கை ஆறு மல்வத்து ஓயா உட்பட பல முக்கிய ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 39 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 79 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் மோசமான வானிலை காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.