நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு சைபர் தாக்குதல் அபாயம்
நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு சைப்ரஸ் சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக 2025ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற வருடாந்த செயற்திறன் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தினால் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைப்புகள்
இதன்போது பரிசீலிக்கப்பட்ட 56 விடயங்களில் 46 விடயங்களுக்கான அபாயம் உயர் மட்டத்தில் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த வருடாந்த செயற்திறன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, சைபர் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உணர்திறன் மிக்க தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல், இணையதளங்களின் உள்ளடக்கங்களை சிதைத்து நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற தீங்கிழைக்கும் செயல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.