குக் வித் கோமாளி சீசன் 5 நடுவர்கள் இவர்களா! வெளியான அறிவிப்பு: குஷியில் ரசிகர்கள்
தென்னிந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5யில் இருந்து வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனும் தற்போது பிரபலமடைந்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வரவுள்ளார்.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அரசியல்வாதிகள் முதல் பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு இவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கும் வித் கோமாளி சீசன் 5 தொடர்பாக ப்ரோமோ காணொளி ஒன்றை விஜய் டிவி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Cooku with Comali 5 ?? | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024