லண்டனில் இருந்து வந்த கணவன்; மனைவியின் தகாத உறவால் நடந்த விபரீதம்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் கணவனை, மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
முஸ்கானும், ரஜபுத்தும் 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மனைவியுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என்பதற்காக ரஜபுத் தனது வேலையை ராஜினாமா செய்தார்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடு
இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து தனது பெற்றோரை பிரிந்து தனியாக வந்து வாடகை வீட்டில் மனைவியோடு தங்கி இருந்தார். இந்நிலையில் முஸ்கானுக்கு சாஹில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றனர்.
ஆனால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் கப்பலில் வேலைக்கு செல்ல ரஜபுத் முடிவு செய்தார். கடந்த 2023ம் ஆண்டுதான் ரஜபுத் கப்பலில் வேலைக்கு சென்றார்.
இதனால் தனியாக இருந்த முஸ்கான் தனது காதலனுடனான நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சாப்பாட்டில் தூக்க மாத்திரை
முஸ்கான் கடந்த 4-ம் தேதி தனது கணவரின் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். ரஜபுத் தூங்கியதும் முஸ்கானும், சாஹிலும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை 15 துண்டுகளாக வெட்டி இருக்கின்றனர். டிரம் ஒன்றில் உடல் உறுப்புகளை போட்டு அதில் ஈரமான சிமெண்ட்டை போட்டு வைத்துள்ளனர். மகனை காணவில்லை என ரஜபுத் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில்தான் இந்த பகீர் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கொலை குறித்து மீரட் பொலிஸ் அதிகாரி கூறுகையில், ''கொலை செய்த பிறகு வெட்டப்பட்ட தலையுடன் உடலை இரவு முழுக்க பாத்ரூம்பில் போட்டு வைத்திருந்தனர். காலையில் 50 கிலோ சிமெண்டும், டிரம் ஒன்றும் சாஹில் வாங்கி வந்தார்.
உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்தனர். ரஜபுத் போனில் இருந்து அடிக்கடி அவரது குடும்பத்திற்கு முஸ்கான் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். கொலை செய்த பிறகு இரண்டு பேரும் சிம்லாவிற்கு சென்று 12 நாட்களை கழித்துள்ளனர் என்றார்.
இந்நிலையில் தகாத உறவால் , மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.