வவுனியாவில் வீடுபுகுந்து கொள்ளையிட வந்தவர் மீது வாள்வெட்டு; தலைதெறிக்க ஓடிய திருடன்
வவுனியா நொச்சுமோட்டைப் பகுதியில் நேற்று இரவு (28.07.2023) வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சிலர் வீடொன்றில் புகுந்து திருட முற்பட்ட நிலையில் திருடர்களின் கையில் வைத்திருந்த வாளைப் பறித்து வீட்டு உரிமையாளர் திருடர்களின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த உரிமையாளரான மா. செல்வநாயகத்திடம் (58) விசாரித்த போது இரவு வீட்டில் மனைவி செ.செல்வராணி தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் முகமூடி அணிந்த நிலையில் திருடர்கள் நுழைந்து இருவர் மீதும் வாள் வெட்டு நிகழ்த்தியுள்ளார்.
தலைதெறிக்க ஓடிய திருடன்
திருடர்களிடமிருந்த வாளைப் பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன் போது திருடர்களில் ஒருவன் வீட்டடிலிருந்த தொலைப்பேசியை எடுத்துக் கொண்டு காயம்டந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார் என அறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.