இரவோடு இரவாக பாரிய மரங்களை வெட்டி சென்ற இனந்தெரியாத நபர்கள்! வவுனியாவில் சம்பவம்
பாரிய மதுரை மரங்களை இரவோடு இரவாக வெட்டி சென்ற சம்பவம் ஒன்று வவுனியா - பனிச்சங்குளத்தில் உள்ள குளகட்டில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று (28) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

வவுனியா பனிச்சங்குளத்தின் குளக்கட்டில் இரண்டு மதுரை மரங்களை இரவு 11 மணித்தியாலத்திலிருந்து அதிகாலை 3 மணி வரை இனந்தெரியாத நபர்கள் வெட்டி குற்றிகளை கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் இடம்பெற்று கொண்டிருக்கும் வேளையில் குறித்த கிராம மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்த நிலையிலும் பொலிஸார் குறித்த இடத்திற்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.