அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தரும் பெருங்காயம்
உணவின் சுவையை அதிகரிக்க பல வகையான மசாலாப் பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை உடலுக்கு எவ்வளவு மிகவும் நன்மை பயக்கிறது.
பெரும்பாலான சமையலறையில் இதன் மணத்திற்காக உணவில் சேர்த்து வரும் இந்த பொருள், ஆஸ்துமா முதல் மாதவிடாய் கால வலி வரை பலவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பெருங்காயத்தின் நன்மைகள்
ஃபெருலா தாவரத்தின் தண்டுகளிலிருந்து பெறப்படும் இது ஒரு வலுவான கந்தக வாசனையைக் கொண்டுள்ளது.
இது இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, வயிற்று வலி போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இரத்த அழுத்தம்
பெருங்காயத்தில் இயற்கையாக இரத்த உறைவை தடுக்கும் சேர்மங்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சமையலில் பெருங்காயத்தை சேர்ப்பது ஆரோக்கியமாக இதயத்தை பராமரிக்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆஸ்துமா
அழற்சி எதிர்ப்பு, வைரஸ், மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெருங்காயம் கொண்டிருப்பதால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வறட்டு இருமல் போன்ற பிற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.
மென்மையான சுவாச பாதையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் கரைத்து மூலிகை டீயாக குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.
மாதவிடாய் கால வலி
பெருங்காயம் மாதவிடாய் வலியைப் போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது. ஏனெனில் இதில் இயற்கையாகவே இரத்த உறைவை தடுக்கும் பண்பு உள்ளது.
அது மட்டும் அன்றி உடலின் எந்தப் பகுதியிலும் தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது.
இதன் காரணமாக இது மாதவிடாய் தொடர்பான முதுகு மற்றும் அடிவயிற்று வலியைக் குறைக்கிறது.
இது புரோஜெஸ்ட்டிரோன் தொகுப்பையும் பாதிக்கிறது, இலகுவான இரத்த ஓட்டம் மற்றும் வலி நிவாரணத்தை ஊக்குவிக்கிறது எனவே மாதவிடாய் கால வலியை கட்டுப்படுத்துகிறது.
தலைவலி
அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இது இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைத்து தலைவலியை குணப்படுத்த உதவுகிறது.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து பகலில் பல முறை குடித்து வர தலைவலி குறையும்.
செரிமானம்
பெருங்காயம் நீண்ட காலமாகவே செரிமானத்திற்கு உதவும் சிறப்பான பொருளாக கருதப்படுகிறது.
இது இயற்கையாகவே இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளான வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
சமைக்கும் உணவுகளான குழம்பு, பருப்பு வகைகள், மற்றும் பீன்ஸ் வகை உணவுகளில் சிறிது பெருங்காயத்தை சேர்ப்பது அதிக அளவில் கார்போஹைடிரேட் கொண்டிருக்கும் உணவுகளையும் செரிக்க உதவுகிறது.
உணவிற்கு பின் ஏற்படும் மந்தத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோய் தடுப்பு
பெருங்காயத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் சில புற்றுநோய் செல்கள் வளர்வதையும் பரவுவதையும் பெருங்காயத்தின் பண்புகள் தடுக்கின்றன.
நீரிழிவு
பீனாலிக் அமிலம் மற்றும் டானின்கள் இருப்பதால் பெருங்காயத்தின் சாறில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான தீர்வை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.