மைத்துனரால் அண்ணிக்கு நேர்ந்த கொடுமை; பொலிஸார் எடுத்த நடவடிக்கை
இளம் குடும்ப பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நன்னபுராவ பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் பெண்ணின் கணவரின் சகோதரரான 21 வயதான நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த பெண் நேற்று முன்தினம் (26) வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபரினால் பலவந்தமாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்குள்ளான பெண் வைத்திய பரிசோதனை நடவடிக்கைகளுக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.