தமிழகத்தில் ஜல்லிகட்டு போராட்டம் போல.....கொழும்பில் திரண்ட மாணவர்கள் !
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கண்டித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் காலி முகத்திடலில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அதில் வெற்றியும் கிடைத்தது.
இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மாணவர்கள் மிகத் தீவிரமாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றியடைய வைத்தனர்.
இந்நிலையில் அதைப் போலவே இலங்கையில் தற்போது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தியும், ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் இலங்கை தலைநகர் கொழும்பில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

