யாழில் கோடிக்கணக்கில் நிதிமோசடி; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி போலி முகவர்கள் நிதி மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள பதிவுகள்
பாதிக்கப்பட்டோர் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர்.
இதுத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.