சிறிதரனை கட்சியை விட்டு துரத்த ஆயத்தமாகும் தரகு அரசியல்வாதிகள்
சிறிதரனை வெளியேற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை கூட்டுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள விடயமாவது,
வழமை போல் தமிழர் அரசியலை இல்லாமல் செய்வதற்காக உள்ளே அனுப்பப்பட்ட சுத்துமாத்து செய்பவர் தன் நெருங்கிய சகாக்களான சில முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து சிறிதரனை கட்சியை விட்டு துரத்திவிட்டு கட்சியை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அதுவும் மத்திய குழு தெரிவு செய்த ஒருவரையே துரத்தும் அளவுக்கு தமிழரசுக் கட்சியினுள் புல்லுருவிகள் புகுந்துள்ளனர்.
உனக்கேன் தமிழரசுக் கட்சியில் அக்கறை என்று கேட்கலாம்? நாங்கள் எதிர்ப்பது அதில் இருக்கும் ஆட்கள் செய்யும் அரசியலைத்தானே தவிர அந்தக் கட்சியை அல்ல. அப்படி சிறிதரன் வெளியேற்றப்பட்டால் , தமிழர் அரசியலை அழிக்க துணைபோகும் அத்தனை ஆட்களும் ஒட்டுமொத்தமாக தமிழ் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் அடுத்த கூட்டத்தின் பின் , சிறிதரன் வெளியேற்றப்பட்டால் , சில முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை இளைஞர்கள் என்ற பெயருடன் சுத்து மாத்து செய்து தலைவராக விரும்புபவர் களமிறக்க உள்ளார்.
இது நடந்தால், தமிழர் அரசியலை சிதைக்க உள்ளே அனுப்பப்பட்ட புல்லுருவிகள் அனைவரும் தேர்தல் பிரச்சார போஸ்டரில் இருக்கலாம்.
தரகர்களை அரசியலில் இருந்து துரத்த வேண்டும். சிறிதரன் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டால், அவர் புதிய ஆளுமைகளை இணைத்து தனித்து இயங்க வேண்டும்.
இதுபற்றி பதிவிட இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. சிறிதரனின் வாக்கு வங்கியை உடைக்க கிளிநொச்சியில் முன்னாள் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட சிங்கள கட்சி இளையவர்கள் சிலரை புதிய வேடமிட்டு தமிழ்தேசிய இளைஞர்கள் என்று சுயாதீனமாக தேர்தலில் இறக்கவும் ஆயத்தம் நடக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.