பசியால் முதலையை முதலையே உண்ணும் அரிய சம்பவம்
தென்னாபிரிக்காவில் 900 கிலோ எடை கொண்ட முதலை 100 கிலோ எடை உள்ள முதலை உண்ணும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் ராட்சத முதலை ஒன்று, சிறிய முதலையை உண்ணும் பயங்கரமான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென் ஆப்பிரிக்காவின் Sunset Dam-ல் உள்ள Kruger National Park-ல் சுமார், 900 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை, சுமார் 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசி காரணமாக உண்ணுகிறது.
பிரபல புகைப்படக் கலைஞர் ஸ்டீபன் காங்கிசர் இந்தக் காட்சியைப் பார்த்தார். அவர் கூறியதாவது, வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அசாதாரணமான காட்சி, பூங்காவிற்கு வருபவர்களுக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
காடுகளில் நடந்த பல நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் அப்படி எதையும் பார்த்ததில்லை. இருப்பினும் அந்த குட்டி முதலையை நினைத்து வருந்துகிறேன். இந்த காட்சியை பூங்காவில் இருந்த பெரும்பாலானோர் பார்த்தனர். இந்த நிகழ்வானது எப்போதும் ஒருவரது மனதில் இருந்தும் நீங்காது.
