மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீது முதலை தாக்குதல் ; பரிதாகமாக ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை – வத்துகெதர பகுதிக்குட்பட்ட மாது ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகை முதலை ஒன்று தாக்கியதில் படகு கவிழ்ந்து, ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்று (25) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வத்துகெதர பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பருடன் படகில் மாது ஆற்றுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தோன்றிய முதலை படகைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலால் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததையடுத்து இருவரும் நீரில் விழுந்துள்ளனர்.
இதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வத்துகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.