தம்பியின் அறிவிப்பால் மஹிந்தவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு 10 வருடங்கள் அந்த பதவியில் செயற்பட்டிருக்க வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது நிதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த யோசனையால் தங்கள் கட்சியில் உள்ள இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaska) மைத்திரிபால சிறிசேன (Maithripala sirisena) தங்கள் ஓய்வூதியத்தை இழக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மறைந்த ஆர்.பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கும் ஓய்வூதியம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.