ராஜபக்சர்களுக்கு பின்வரிசை எம்.பிக்களாலும் நெருக்கடி
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுப்பொறிமுறை விரைவில் முன்வைக்கப்படாவிடின் அவர்கள் அரசியல் தீர்மானமொன்றை எடுக்கக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட ஒரு சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தவிர, ஏனைய ஆளுங்கட்சி பின்வரிசை எம்.பிக்கள் , அரசாங்கம் குறித்து கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நாட்டு மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு சாபம் இடுகின்றனர். வீதியில் இறங்கி செல்ல முடியவில்லை. எனவே, தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் தீக்கமான முடிவை எடுக்க நேரிடும். என ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, சில அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி நிலையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.