ஜனாதிபதி அநுர மீது குற்றவியல் வழக்கு ; எச்சரிக்கும் உதய கம்மன்பில
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2029 இல் பதவியை விட்டு வெளியேறியவுடன், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலையின் தீவிரத்தை அறிந்தும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றவியல் வழக்கு
எனவே, இந்த அலட்சியப் போக்கிற்காக ஜனாதிபதி மீது குற்றவியல் வழக்குத் தொடரலாம் என அவர் கூறியுள்ளார்.
எனினும், இப்போது அவருக்கு ஜனாதிபதி தண்டனை விலக்கு இருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர முடியாது என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதியின் குற்றத்தை நிரூபிக்க தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.