ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்!
தமிழ்நாட்டிலுள்ள மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் விஜய் 28 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது, அழகுபேச்சி என்ற பாடசாலை மாணவி தமது காளையை களத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
எனினும், அந்த காளையையும் விஜய் பிடித்திருந்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் வகையில், காளையின் உரிமையாளரான பாடசாலை மாணவி அழகுபேச்சிக்கு, தமக்கு போட்டியின் மூலம் கிடைக்கப்பெற்ற பரிசுகளை வழங்கி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.