உயர்தர பரீட்சைக்காகத் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நிதிமன்றம்
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையை இடைநிறுத்துமாறு கோரி வெளிப்படைத்தன்மை முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அந்த மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறி நீதிபதி சோபித ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீடு செய்து நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மனுவின் பிரதிவாதிகளாக கல்வியமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நிலவும் கொவிட்-19 காரணமாக உயர்தர மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியவில்லை.
எனவே அவர்களின் பரீட்சையை குறைந்தபட்சம் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நாகாநந்த கொடித்துவக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.