சஹ்ரானின் மனைவி தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர்தின தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி கோரிய பிணை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனுவை இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.
சஹ்ரானின் மனைவி தரப்பு சட்டத்தரணி ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பிணை மனு விண்ணப்பத்தின் பிரகாரம், இன்று காலை கொழும்பு புலனாய்வுத் துறையினரால் நீதிமன்றத்துக்கு சஹ்ரானின் மனைவி அழைத்துவரப்பட்டார்.
இதன்போது மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவரது பிணை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.