கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேக்கு நீதிமன்றம் உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுரேஷ் சலே தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.