50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு கார் விற்பனை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு கார்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துருகிரிய, கல்வருசாவ வீதி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், வாகன வாடகை சேவை நிலையங்களுக்குச் சென்று வாடகை அடிப்படையில் கார்களை பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.