காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனோரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (டிச.16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர்.
ஆட்கொணர்வு மனு
இந்நிலையில் , காணாமல் போனோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த மனு மீதான விசாரணைகளின் போது, இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல் போனோரை அடுத்த தவணையின் போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் , அவ்வாறு இல்லையென்றால், காணாமல் போனமைக்கான காரணத்தை தெளிவூட்டுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்ணவேல் தெரிவித்துள்ளார்.