பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் ட்தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!
கொழும்பில் உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் பாகங்களை விசாரணை நோக்கங்களுக்காக பாதுகாப்பாக வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (14) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தினேஷ் ஷாஃப்டரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.