தமிழர் பகுதியில் தீயணைப்புத் திணைக்களத்தின் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
20,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட திருகோணமலை மாநகர சபை தீயணைப்புத் திணைக்களத்தின் அதிகாரி மற்றும் ஊழியரை 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (20) உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் மேலும் எடுத்துரைத்த இலஞ்ச ஆணைக்குழு, தீ பாதுகாப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக 20,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டதாகக் குறிப்பிட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.