முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.