கிளப் வசந்த கொலை விவகாரம் ; டெட்டூ மல்லிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்த) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பச்சை குத்தும் நிலைய உரிமையாளரான துலான் சஞ்சுல (டெட்டூ மல்லி) என்பவரை பிணையில் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, துலான் சஞ்சுலவை 150,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 250,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க ஹோமாகம நீதிபதி உத்தரவிட்டார்.
வெளிநாட்டு பயணத் தடை
மேலும், சந்தேக நபர் துலான் சஞ்சுலவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்ற சந்தேக நபர்களையும் அதே பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2024 செப்டம்பர் 26 அன்று, கிளப் வசந்த என அழைக்கப்பட்ட சுரேந்திர வசந்த பெரேரா, அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.