ISIS விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு அனுமதித்த நீதிமன்றம்
ISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (2024.06.01) கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன், இணையத்தில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.